
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான நபர்கள் ஏதாவது உலக சாதனை படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்த வகையில் 1 மணி நேரத்தில் 59 வயதில் 1575 புஷ் அப் or தண்டால் எடுத்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, புஷ் அப் செய்யும் பொழுது நமது முழங்கைகள் 90° வரை கீழே வளைய வேண்டும்.
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!

மீண்டும் எழும் பொழுது கைகள் இரண்டும் முழுவதுமாக நீட்டிக்கப்பட வேண்டும் என்ற முறை இருந்து வருகிறது. அதன்படி கனடாவைச் சேர்ந்த டோனா ஜீன் என்ற பெண்மணி 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ் அப் முடித்து தனது இரண்டாவது உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் 11 வினாடிகள் பிளாங்க்(Plank) பொசிஷனில் தனது முதல் உலக சாதனையை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க 3 நிமிடம் தான் – அதுக்கு மேல பண்ணா அபராதம்!
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த பாட்டிக்கு கிட்டத்தட்ட 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். அந்த பேரக்குழந்தைகள் அனைவரும் பாட்டிக்கு உற்சாகம் கொடுத்ததால் தான் சாதனை படைக்க முடிந்தது என்று கூறியுள்ளார். அவர் சாதனை குறித்து பேசுகையில், ” நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு , ஆரோக்கிய இலக்குகளை வைத்திருந்தால் எல்லா வயதிலும் அழகாகவும் சக்தி வாய்ந்தவராகவும் இருக்க முடியும் என்று டோனா ஜீன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்