பொதுவாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் இங்கு படிப்பதை விட வெளிநாடுகளில் சென்று படிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் எக்கசக்க மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் முதல் தேர்வாக இருக்கும் கனடா நாட்டில் அந்நாட்டு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது கனடாவில் படிக்க சர்வதேச மாணவர்களுக்கு வழங்கும் நுழைவு விசா எண்ணிக்கையை அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது. இது குறித்து கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் பேசுகையில், கனடாவில் படிக்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும் பிற நாட்டவர்கள் தங்குவதற்கு போதுமான வீடுகள் இங்கு இல்லை. எனவே அடுத்த வருடம் முதல் விசா எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.