மகரம் சனிப்பெயர்ச்சி 2025 – 2027: திருக்கணிதப்படி இன்று முதல் சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுகிறார். இதன் மூலம் மகர ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்து சனி பலன் தரப்போகிறார். எனவே இனி, வரும் காலம் உங்களுக்குப் பொற்காலமாக அமையும். மேலும் மகர ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
மகர ராசியினருக்கு ஏழரைச் சனி விலகி, இத்தனை நாள் உடலில் இருந்து நோய்கள் தீரும். இனி ஆரோக்கியமாக இருப்பீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடிவுகாலம் பிறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வாரிசு இல்லை என்று அவதிப்பட்ட தம்பதிகளுக்கு குழந்தை வரன் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் அப்படியே விலகும்.
மேலும் சிலருக்கு நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் கிடைக்கும். பங்குச் சந்தையில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு புதிய தொழில் வைக்க வாய்ப்புகள் கிட்டும்.
சொல்லப்போனால் பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நேரம் இது தான். மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கி மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்புகள் வரும்.
புதிதாக யாரிடமும் கடன் வாங்காமல் இருந்தால் நல்லது. விளையாட்டாகச் கூறும் வார்த்தைகள் கூட வினையில் முடியலாம். எனவே பேச்சில் மிகவும் கவனம் தேவை. வியாபாரம் மற்றும் கடை வைத்திருப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.
மகரம் சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்:
சனிப்பெயர்ச்சி காலத்தில் பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், திருவோண விரதம், ஏகாதசி விரதம், “ஓம் நமோ நாராயணா” மந்திர ஜெபம் போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.