![பொங்கல் ரேஸில் அயலானை ஓடவிட்ட தனுஷ்.., "கேப்டன் மில்லர்" முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? தயாரிப்பாளர் செய்த காரியம்!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/ff-139-jpg.webp)
தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் நட்சத்திரங்கள் கொஞ்சம் பேரு தான். அதில் ஒருவராக காலரை தூக்கி திரிபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/2-51-jpg.webp)
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இப்படம் நேற்று வெளியான நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வந்த முதல் நாளில் மட்டும் ரூ 14 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-137-jpg.webp)
அடேங்கப்பா.., அயலான் படத்தோட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா?
மேலும் இந்த படத்துடன் மோதிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெறும் ரூ 9 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்த பொங்கல் ரேஸில் தனுஷ் தான் வின் செய்வார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கேப்டன் மில்லர் தயாரிப்பாளர் தனுஷ்க்கு மாலை போட்டு கௌரவித்தார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.