கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது - மறைந்தும் மக்களுக்கு உணவை வாரி வழங்கும் வள்ளல்!!கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது - மறைந்தும் மக்களுக்கு உணவை வாரி வழங்கும் வள்ளல்!!

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது: தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் என்றால் அது மறைந்த கேப்டன் விஜயகாந்த் தான். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்த இவர், நற்பணி மன்றம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக தன்னை தேடி வருபவர்களுக்கு வயிறு முட்டும் அளவிற்கு சோற்றை போட்டு அனுப்புவாராம். இதற்காக அவரின் கல்யாண மண்டபம், அவருடைய ஆபீஸ் என உள்ளிட்ட இடங்களை விஜயகாந்த் பயன்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் 27 தேதி நம்மை விட்டு பிரிந்தார் விஜயகாந்த். இந்நிலையில் அவர் இறந்தும் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.

அதாவது மறைந்த மக்கள் நாயகன் விஜய் காந்தின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த கடந்த 125 நாட்களில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உள்ளனர். அதுமட்டுமின்றி அஞ்சலி செலுத்த வருபவர்களின் பசியாற்றும் விதமாக அவரின் நினைவிடத்தில் வைத்து பிரேமலதா அன்னதானம் வழங்கி வருகிறார். அதன்படி பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக போற்றப்படுகிறது. இந்நிலையில் இதனை உலக சாதனையாக கருதி  லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழ் நேற்று முன் தினம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி மாணவர்களே – ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை – மத்திய பிரதேசம் அதிரடி அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *