தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி - போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி - போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அரசு கொண்டு வந்த முதல் திட்டம் தான் மகளிர் இலவச பேருந்து. தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இருந்து வந்தாலும் கூட, தொடர்ந்து இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது.

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி

இந்நிலையில் புதிய திட்டத்தை போக்குவரத்துக் கழகம் கொண்டு வந்துள்ளது. அதாவது தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க இருப்பதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் (STUs), எட்டு கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம், 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி வருகிறது.

Also Read: பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – அரசின் அசத்தலான திட்டம்!!

பொருட்கள் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக தற்போது நியமித்துள்ளது. எனவே இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் நிலையில் அதை பயன்படுத்தி, நீண்ட காலப் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிலைத்துவமாக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *