எல்.முருகன் மீது வழக்குபதிவு ! தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு !

எல்.முருகன் மீது வழக்குபதிவு.நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடக்கிவிட்டது. பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

பாஜக சார்பில் நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டார். அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றம் ! இவ்வளவு நேரம் தான் திறந்திருக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கருத்து !

கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு முறையான அனுமதி பெறாமல் கடநாடு கிராமத்தில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதால் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment