காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது

இந்நிலையில் தமிழ்நாடு , கர்நாடகா, கேரளா போன்ற சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் வகையில் வரும் 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதிறக்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள் ! வண்டிகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது – போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை !

அத்துடன் இந்த கூட்டத்தில் கோடை காலம் என்பதால் அதன் தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *