Breaking News: முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் கூறியிருப்பதாவது, ” வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் இந்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல இருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
ஆனால் சில காரணங்களால் அவர் இம்மாதம் செல்ல முடியாமல் போனது. இப்படி இருக்கையில் முக ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில் வருகிற சுதந்திர தினத்தன்று 15-ந்தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15 நாட்கள் வெளிநாடு சென்று வர இருக்கிறார்.
Also Read: இனி பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்தால் அவுட் – கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை கொண்டு வந்த கிளப்!!
மேலும் தமிழக முதல்வர் வெளிநாடு சென்றால் , தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்கா செல்லும் போது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.07.2024)
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்