மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் - ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் - ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

தற்போது மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் அறிவிப்பை தொடர்ந்து வரும் ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் ஜூலை 21ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காரணமாக நடப்பு 2024-25 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் ஆகும்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் – முழு தகவல் இதோ !

அந்த வகையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2047 க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டு தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த காரணமாக இந்த பட்ஜெட்டில் அதற்கான திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *