அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

தற்போது அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Port Blair

அந்தமான் நிகோபர் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் இருந்தது. தற்போது போர்ட் பிளேயர் பெயரை மாற்றி ஸ்ரீ விஜயபுரம் என பெயரிட்டுள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்தமான் தீவு, சோழ பேரரசில் கப்பல் படை தளமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். Andaman and Nicobar Islands

இந்தியவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனியின் கடற்படை அதிகாரி ஆர்க்கிபால்ட் பிளேயரின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவாக அந்தமான் நிக்கோபாரின் தலைநகருக்கு போர்ட் பிளேர் என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. Central Government

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் – தமிழறிஞர்கள் அதிர்ச்சி !

அந்த வகையில் அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலக்குப்படி, காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து தேசத்தை முழுவதுமாக விடுவிக்கும் வகையில், போர்ட் பிளேர் என்ற பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்ற முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார். Home Minister Amit Shah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *