அடுத்த ஆண்டு 2025ல் 8 வது குழு அகவிலைப்படி அதிகரிக்க இருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8வது குழு அகவிலைப்படி:
2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தெளிவாக சொல்ல போனால், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் தனிப்பட்ட அம்சங்களை கருத்தில் வைத்து தன மத்திய அரசு, ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை வருடத்திற்கு இரண்டு முறை அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு அமைப்பு வாயிலாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இப்பொழுது, 8 வது குழு அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதால், பணியாளர்களுக்கு ஒரேயடியாக சம்பள உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி – இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!
இது குறித்து EPFO அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” அடுத்த ஆண்டு 2025 அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 25,000 அல்லது அதற்கு மேல் ஊதியம் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை EPFO அமைப்பின் கீழ் அடிப்படை சம்பளம் ரூ.6,500 ஆக இருந்தது. தற்போது அதை ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் இப்பொழுது இருக்கும் ரூ.15,000 என்ற அடிப்படை சம்பளம், ஒரேயடியாக ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி – தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!