தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களின் மாதாந்திர சம்பளம் அதிகமாக உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏழாவது ஊதியக்குழு விதியின் படி அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும் போது, அது பூஜ்ஜியம் செய்யப்படும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து அதற்குரிய தொகையை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கு, அறிவிப்பு வெளியான மாதம் முதல் 9 ஆயிரம் அதிகரித்து கிட்டத்தட்ட ரூ.27,000ஆக ஊதிய உயர்வு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அறிவிப்புகளை மத்திய அரசே தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.