செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா ?செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா ?

இந்தியாவில் வரும் செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி எந்தெந்த திட்டங்கள் உருவாக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து வரப்போகும் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் TRAI ன் புதிய விதிகள் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் போலி அழைப்புகள் (Fake calls) மற்றும் செய்திகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும், போலி அழைப்புகள் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக டிராய் கடுமையான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HDFC பேங்க் மற்றும் IDFC பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ரிவார்டுகளில் செப்டம்பர் 1 முதல் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2,000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.

மேலும் ருபே கார்டுகளின் UPI பரிவர்த்தனைக்கு வெகுமதிகள் மற்றும் பிற பலன்களை வழங்க வங்கிகளுக்கு NPCI அறிவுறுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான (Aadhaar Card Free Update) கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேதிக்குப் பிறகு ஆதார் தொடர்பான சில அம்சங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செப்டம்பர் 14ம் தேதிக்குப் பிறகு ஆதாரை ஆதார் அட்டையை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வரும் செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமானது 3% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 53% ஆக அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *