தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளை கண்டறியும் Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
Fact Check Unit :
மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட ஐடி விதிகள் செல்லாது என மும்பை உய்ரநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட விதிகளானது அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 19 ஐ மீறுவதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Fact Check Unit
நீதிமன்றம் தீர்ப்பு :
மத்திய அரசு 2023 ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தும் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த திருத்தங்கள் அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த குழுவிற்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு நீதிபதி குழு அமைத்தது செல்லும் என்றும்,
மற்றொரு நீதிபதி குழு அமைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து இந்த வழக்கானது தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசிற்கு உண்மை கண்டறியும் குழு அதாவது Fact Check Unit அமைக்க உரிமையில்லை என்றும், மேலும் இந்த திருத்தப்பட்ட விதிகளானது அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 19 ஐ மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? – தமிழ்நாடு அரசு விளக்கம் !
இதனை தொடர்ந்து இவ்வாறு உண்மை கண்டறியும் குழு அமைக்க மத்திய அரசிற்கு உரிமையில்லை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து,
மேலும் தமிழ்நாடு அரசும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ள நிலையில் இதற்க்கு எதிரான வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.