உலக நாடுகளில் வினோதமான உணவு பழக்கங்கள் இருந்து வருவது இயற்கை தான். அந்த வகையில் ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப் பகுதியில் மக்கள் எறும்பு சட்னி உண்டு வருகின்றனர். என்னது., எறும்புல சட்னியா என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் அது உண்மை தான். செவ்வெறும்பு கள் மரத்தில் காணப்படும் இலைகளை வைத்து கூடு கட்டி தங்களது குஞ்சுகளை வளர்த்து வருகிறது. அந்த செவ்வெறும்பு களை வைத்து தான் ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப்பகுதியில் வாழும் மக்கள் துவையல் செய்து உண்ணுவது மற்றுமின்றி சந்தையில் விற்பனையும் செய்து வருகின்றனர்.
சந்தான பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!
இந்த துவையலை சாப்பிடுவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், பசியின்மை, பார்வைத் திறன் குறைவு, மூட்டு வலி, வயிற்று வலி உள்ளிட்ட நோய்களில் இருந்து விடுபட செய்கிறது. இதனை தொடர்ந்து இந்த செவ்வெறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் ஒடிசா அரசு கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!