நீண்ட காலம் ஒரே AC யை Air conditioners பயன் படுத்துவதால் நாம் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிக மின் தேவை, பராமரிப்பு, போன்ற செலவுகள் அதிகம். இந்த நிலையில் மத்திய அரசு சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நமது வீட்டில் 8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டிலுள்ள பழைய ஏ.சி.க்களை பெற்றுக்கொண்டு அதற்குரிய குறிப்பிட்ட தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
பழைய ஏசிகளால் மின்சார நுகர்வு அதிகம் தேவை. அவற்றுக்கு பதில் 5 ஸ்டார் குறியிடு கொண்ட மின் சிக்கனம் மிகுந்த ஏசிக்களை வாங்க ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இனி ATMல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்.., ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு!!
இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து BlueStar, Godrej, LG, Voltas, Havels போன்ற நிறுவனங்களுடன் பேசவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மிசாரத்தை சிக்கனப்படுத்தும் ஏசியை வாங்க ஊக்குவிப்பதால் மின் தேவையை இன்னும் 13 ஆண்டுகளில் 25% முதல் 40% வரை குறைக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பழைய ஏசியை மற்ற நினைப்பவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு தான்.