இந்தியாவில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
லடாக் :
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு வேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
புதிதாக 5 மாவட்டங்கள் :
அந்த வகையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் இதுவரை இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவை லே, கார்கில் மாவட்டங்கள். அந்த மாவட்டங்களை சுயாதீன மாவட்ட கவுன்சில்கள் நிர்வகித்து வருகின்றன.
இந்நிலையில், ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இனி லடாக்கில் மொத்தம் 7 மாவட்டங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து :
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (திங்கள்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில், “லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
அத்துடன் புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களிடம் எளிதில் சென்றுசேரும். மேலும் நல்ல நிர்வாகத்தை ஒவ்வொரு மூலை முடுக்கும் கொண்டு செல்லவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் மதுபானக்கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல் – மாநகர காவல்துறை அறிவிப்பு !
இதனை தொடர்ந்து வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பார்வையை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேலும் லடாக் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.