தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அளித்து மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
750 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை:
தற்போது அரசு ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை நாட்களாக அவர்களின் பணி காலத்தில் மொத்தம் 730 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
அது முதல் 2 குழந்தைகளை வளர்க்கவும், கல்வி, உடல்நல குறைவு ஆகியவற்றிற்காகவும் இந்த விடுமுறையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் தற்போது இந்த 21 ம் நூற்றாண்டில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் பணியாளர்களுக்கு இதற்க்கு முன்பு வரை குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க விதிமுறைகளில் இடமில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு விடுமுறை அளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தும் ஒன்றை மேற்கொடுள்ளது.
சட்ட திருத்தம்:
இந்த நிலையில் 1972 ம் ஆண்டின் மத்திய சிவில் சர்விசஸ்(விடுமுறை) விதிமுறைகளில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தற்போது திருத்தங்களை செய்துள்ளது. மேலும் இந்த திருத்தங்களானது அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை வழங்கப்படும் என்றும்,
அத்துடன் 2 குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால்தான் அவர்கள் இச்சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !
ஆண் ஊழியர்கள்:
குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகை தாய், அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 180 நாட்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.
இதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற ஆண் அரசு பணியாளர்களுக்கு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் 15 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு சட்ட திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.