Home » செய்திகள் » சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி தோல்வியை தழுவும் தருவாயில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடர் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய கேப்டன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது பும்ரா தான் அணியை வழிநடத்திச் செல்கிறார்.

மேலும், ரோஹித் பார்மில் இல்லாத காரணத்தால் அடுத்து நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித்க்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது, ஹர்திக் பாண்டிய தான் கேப்டனாக பொறுப்பேற்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கு முன்பு நடக்க இருக்கும், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி,ரோகித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!

ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top