பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025 இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமீபத்தில் விறுவிறுப்பாக விளையாடி வந்த நிலையில், இந்திய அணி படு தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலி தான் என்று பலரும் விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது.
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025: ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!!!
பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால் இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி குரூப் A பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும், B பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளது.
26 வயது எம்பியை கரம்பிடிக்கும் ரிங்கு சிங் – யார் இந்த பிரியா சரோஜ் தெரியுமா?
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், கில், ஸ்ரேயாஸ், KL ராகுல், ஹர்திக், அக்ஸர், வாஷிங்டன், குல்தீப், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஸ்குவாடில் இடம் பெற்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!
மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?
டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?