2024ல் இரண்டாவது புயலாக நாளை ASNA புயல் உருவாக வாய்ப்பு. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. India Meteorological Department – msd
நாளை ASNA புயல் உருவாக வாய்ப்பு
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசை பக்கம் சென்று அடுத்த 2 நாட்களில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரப் பகுதியை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. weather report news in tamil
அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கிறது. இந்த சூழலில் இந்திய ஆய்வு மையம் ஒரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
அதாவது, சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை காலை புயலாக வலுப்பெற கூடும்.
Also Read: நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் – ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!
இதனால் இந்த ஆண்டில் 2 வது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், தற்போது 2வது புயல் உருவாவதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த இந்த இரண்டாவது புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா (ASNA) என பெயரிடப்படும் என்று தெரிகிறது. Chance of 2nd storm of this year 2024
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?