Weather Report News: தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் சில முக்கிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனை தொடர்ந்து நாளை திருப்பூர், தேனி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, தர்மபுரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இந்த தேதியில் ரேஷன் கடை செயல்படாது? ஏன் தெரியுமா?
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரமும் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை. chance of heavy rain
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்