Tamilnadu Weather Report 2024: தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை1 பெய்து வருகிறது. காலை வெயில் மாலை மழை என அடுத்தடுத்து வானிலை மாறி வருகிறது. இந்நிலையில் சென்னை2 வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
மேலும் தமிழகத்தில் இன்று (ஜூன் 18) முதல் ஜூன் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது குறிப்பாக வரும் ஜூன் 22ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அதே போல் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. tamilnadu weather news – வானிலை – neelagiri – Dindigul – kovai – thiruppur
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை
உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர் பெர்குசன்!
சென்னையில் 15 விமான சேவைகள் பாதிப்பு
ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்