தமிழக மக்களே குளுகுளு செய்தி – இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் நீர் நிலையங்களை தேடி கோடை விடுமுறையை கொண்டாட நினைக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது அடுத்த மூன்று மணி நேரத்தில் தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.