
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்லப்போனால் மழை எப்படா பெய்யும் சூட்டை தணிக்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக , காற்றின் திசை மாறுபடும் சூழ்நிலை நிலவுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, நெல்லை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் ஆனந்தத்தில் இருந்து வருகின்றனர்.