தமிழகத்தில் செப்.1 வரை கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் செப்.1 வரை கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல் நாளை மறுநாள் முதல் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Also Read: 112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு – இணையத்தில் வைரலாகும் போட்டோ!
அதுமட்டுமின்றி இன்று முதல் ஆக. 30 வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு