தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் நிலையங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் சென்னை வானிலை மையம் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த வாரம் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மண்டலமாக வலுவடைந்த நிலையில் இன்று விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
மேலும் ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை – ஒலி மாசை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை!
குறிப்பாக தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேரங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. chance of rain over chennai
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை