முக்கிய செய்தி 18.07.2024: இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் குஜராத்தில் சண்டிபுரா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ்
குறிப்பாக சொல்ல போனால் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட பகுதிகளில் தான் சண்டிபுரா வைரஸ் பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் கொசு உள்ளிட்ட சில பூச்சிகளின் மூலமாக தான் பரவுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வைரஸ் கிராமப் புறங்களில் தான் அதிகமாக காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !
இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, குஜராத்தில் 44,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் கிட்டத்தட்ட 14 பேருக்கு ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என் முதல்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் 4 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையயில், அந்த சிறுமிக்கும் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வைரசால் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. chandipura virus vector.