சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !

   சந்திரமுகி 2  OTT வெளியீடு தேதி அறிவிப்பு. சந்திரமுகி பாகம் 2 வருகின்ற 28ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. சந்திரமுகி 2 கதை இது தான் என ராகவா லாரன்ஸ் கூறி இருக்கின்றார். பலரின் எதிர்பார்ப்புகளை இத்திரைப்படம் பூர்த்தி செய்யுமா. சந்திரமுகி கதை என்னவாக இருக்கும்.  

சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !

சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !

சந்திரமுகி :

   கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் , பிரபு , நயன்தாரா , ஜோதிகா நடித்த பிரம்மாண்டமான திரைப்படமாக வெளியாகியது. பி.வாசு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் முதன் முதலில் தமிழ் மொழில் இருந்து ஜெர்மன் மொழிக்கு டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமை உடையது. மேலும் ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் துருக்கி போன்ற மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியது. திரைப்படத்தில் அரண்மனை , பாம்பு போன்ற பல மர்மங்கள் நிறைந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்நிலையில் சந்திரமுகி பாகம் 2 வருமா என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தது.

சந்திரமுகி 2 :

  பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரமுகி 2 திரைப்படம் பி.வாசு இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து இருக்கின்றார். சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் கங்கண ரணாவத் நடித்துள்ளார். முருகேசன் கதாப்பாத்திரத்தில் வடிவேலுவே நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா , லட்சுமி மேனன் , மனோபாலா போன்ற பல திரைபிரபலங்கள் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீர வாணி சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா ‘ நிறுவனம் தான் திரைப்படத்தினை தயாரிக்க உள்ளது.  

கதை என்ன :

   சந்திரமுகி 1 திரைப்படத்தின் தொடர்ச்சி தான் சந்திரமுகி பாகம் 2 என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் சந்திரமுகி 2 முற்றிலும் வேறுபட்ட கதை என்று சொல்லப்படுகின்றது. சந்திரமுகி என்னும் பெயர் மட்டுமே இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாகம் ஒன்றில் ஜோதிகா சந்திரமுகி கதாப்பாத்திரம் போல் மாறினார். பாகம் இரண்டில் ஒரிஜினல் சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதை. வேட்டையன் கதாப்பாத்திரத்தில் ஒரு திருப்பு முனை இருக்கின்றது. அதனை திரையில் தான் நாம் பார்க்க முடியும்.

லியோ திரைப்படம் OTT வெளியீடு ! திரையில் வெளியான 4 வாரத்திற்குள் !

முருகேசனாய் வடிவேலு :

   18 வருடங்களுக்கு முன் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலு நகைச்ச்சுவையில் அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பபார். ஆனால் தற்போது சிறந்த குணசித்திர நடிகராக வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். பழைய முருகேசனை போல் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் வடிவேலு அழும் காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

சந்திரமுகி 2 ட்ரெய்லர் வெளியீடு :

   சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை போல் இன்று மாலை திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாக இருக்கின்றது. இன்று வெளியாகும் ட்ரெய்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரைப்படம் வெளியிடும் தேதி :

   விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்ததால் திரைப்படம் வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற 28.09.2023 வியாழக்கிழமை மிலாடிநபி விடுமுறை கொண்டாடும் விதமாக வார இறுதியில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. 

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

OTTல் சந்திரமுகி 2 :

   திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்கு பின்னர் OTT தளங்களில் வெளியாகும். அதனை போலவே சந்திரமுகி 2 திரைப்படத்தின் OTT அமேசான் பிரேம் வீடியோ நிறுவனம் வாங்கி இருக்கின்றது. திரைப்படம் திரையரங்கில் வெளியான 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்கு பின் OTTயில் வெளியாகும். அதாவது நவம்பர் மாதத்தின் இடையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !

பாடல் , நடனம் , இசை , கதை என அனைத்திலும் சந்திரமுகி 2 புதுமையாக இருக்கும். எனவே நாம் OTT தளங்களில் வெளியாகும் அதன் பின்னர் பார்க்கலாம். இப்படியெல்லாம் நினைக்காமல் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும் என்பதே திரைப்படக்குழுவின் கோரிக்கையாக இருக்கின்றது. 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *