சந்திரயான் 3  பிரக்யான் ரோவர் சந்திரயான் 3  பிரக்யான் ரோவர் 

   சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா. உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் 14 நாட்களுக்கு பின் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது சூரிய ஒளி பட்டு கடந்த 22ம் தேதி அன்று செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரையில் செயல்பட வில்லை. சந்திரயான் 3 பிரக்யான் செயல்பட வாய்ப்புகள் உள்ளதா என உலகமே எதிர்பார்க்கும் நேரத்தில் இஸ்ரோ சார்பில் விஞ்ஞானிகள் தகவலை தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா ! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர் 

வரலாறு :

   இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த 2008 அக்டோபர் 22ம் தேதியில் சந்திரயான் 1 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. 28 ஆகஸ்ட் 2009 வரையில் நிலவில் செயல்பட்ட சந்திரயான் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தது. அதன் பின்னர் சந்திரயான் 2 விண்கலம் 22 ஜூலை 2019ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்டது. விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக சந்திரயான் 2 திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கைவிடப்பட்டது.

சந்திரயான் 3 :

   பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் சந்திரயான் 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த ஜூலை 14 அன்று நிலவுக்கு அனுப்பப்பட்டது. சந்திரயான் 3விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி அன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்றும் நிலவின் தென்முனையில் விண்கலத்தினை தரையிறக்கிய முதல் நாடு ‘ இந்தியா ‘ என்ற பெருமையை பெற்றது.

செயல்பாடு : 

   நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு ‘ சிவசக்தி ‘ என்று பெயரிட்டனர். இந்த இடத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் சூரிய ஒளியை பயன்படுத்தி 14 நாட்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பிரக்யான் 100 மீட்டர் வரையில் ஆய்வு செய்தது. 14 நாட்கள் ஆய்வின் இறுதியில் நிலவின் தென் துருவத்தில் மீத்தேன் போன்ற தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தது. 

16 லட்சத்தில் பைக் ! 1.5 லட்சத்தில் ஹெல்மெட் ! TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  !

செயல்பாடுகள் நிறுத்திவைப்பு :

   பூமியில் 24 மணி நேரத்தில் பகலும் இரவும் மாறி மாறி வருகின்றது. அதே போல் நிலவில் இரவு வந்த பின் சூரியஒளி மீண்டும் வருவதற்கு 14 நாட்கள் ஆகின்றது. இந்த இரவு நேரத்தில் குளிர் -150 முதல் -253 டிகிரி வரையில் இருக்கும். ஆகவே 14 நாட்கள் பிரக்யான் ரேவர் ஆய்வு செய்வதர்க்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

மீண்டும் செயல்பாடு ஆரம்பம் :

   14நாட்களுக்கு பின்னர் கடந்த 22ம் தேதி அன்று லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீது சூரிய ஒளியானது படத்தொடங்கி விட்டது. ஆனால் 6நாட்கள் ஆகியும் பிரக்யான் ரோவர் செயல்பட வில்லை. விஞ்ஞானிகள் அதன் செயல்பாட்டை பெற சிக்னல் கொடுத்து வருகின்றார்கள். இதனால் மீண்டும் பிரக்யான் ரோவர் செயல்படுமா இல்லை சந்திரயான் 3 திட்டம் நிறுத்தப்படுமாக என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.

விஞ்ஞானிகள் கருத்து :

   உலகமே வியக்கும் சந்திரயான் 3திட்டத்தின் மூலம் பிரக்யான் ரோவர் பல ஆராய்ச்சிகளை செய்து உள்ளது. கடும் குளிரில் இருந்த லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சூரிய ஒளி கிடைத்தும் மீண்டும் செயல்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் ரோவர் மீண்டும் செயல்படுவதர்க்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். உலகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் கருத்துப்படி விக்ரம் லேண்டர் இனி செயல்படாது என்று கூறுகின்றனர். 

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து :

   ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவர் செயல்பட வைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். மீண்டும் பிரக்யான் ரோவர் செய்லபடும் என்ற நம்பிக்கையிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளனர். இன்னும் 10 நாட்கள் வரையில் பிரக்யான் ரோவர் சிக்னல் பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.  

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர் 

அமெரிக்கா , சீனா போன்ற நாடுகள் வியக்கும் வண்ணம் பல சந்திரயான் 3 பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளது. பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்பட்டால் இன்னும் பல கண்டு பிடிப்புகளை மேற்கொள்ளும். இவையே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பிரக்யான் ரோவர் செயல்படுமா இல்லை இதோடு திட்டம் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *