சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை - அடிவாரத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தவிப்பு!!சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை - அடிவாரத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தவிப்பு!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை: விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அலைமோதுவது வழக்கம். இப்படி இருக்கையில் நேற்று முன் தினம்  ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

அதன்படி நேற்று மட்டும் கிட்டத்தட்ட 70 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனால் அந்த கோவிலில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் ஆங்காங்கே பத்தர்கள் நிறுத்தப்பட்டனர். devotees news

அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கொஞ்ச கொஞ்ச பேரை உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும் இது மாதிரியான நெரிசல் மீண்டும் ஏற்படாமல் இருக்க இன்று பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளது. aadi amavasai 2024

Also Read: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு!!

இதனால் ஆயிரக்கணக்கானோர் அடிவாரத்தில் காத்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக, தீயணைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Chathuragiri Sundara Mahalingam Temple

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *