Home » செய்திகள் » விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 -  மவுனம் கலைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024: சென்னை மெரினா கடற்கரையில் 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி வான்படையின் சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புக்காக அங்கு 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024

அதிக ஏற்பாடுகள் செய்த போதிலும், கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் சுமார் 240 பேர் மயக்கம் அடைந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான  அறிக்கையில், ” சென்னையில் நேற்று முன் தினம் மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதற்கான ஒத்துழைப்பையும், வசதிகளையும்  இந்திய விமானப்படை கேட்டதை விட அதிகமாக அரசு செய்து கொடுத்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது 

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top