தமிழகத்தில் உள்ள சென்னைக்கு விமானத்தில் கொக்கைன் கடத்தி வந்த பெண்: நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு பெண் 2 கிலோ கொக்கைன்களை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆப்பிரிக்கா நாடான கானாவில் இருந்து ஒரு இளம் பெண் சென்னை விமான நிலையத்திற்கு கால் செருப்பு (காலணிகளில்) 2 கிலோ கொக்கைன்-களை மறைத்து வைத்து கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
Also Read: காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
இதை தொடர்ந்து 21 கோடி மதிப்பிலான கொக்கைன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இளம்பெண்ணை கைது செய்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த இளம் பெண்ணுக்கு சிறை தண்டனை கொடுத்து உத்தரவிட்டனர். அதன்படி அந்த பெண்ணை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. cocaine – girl arrested – police case – tamilnadu news – chennai airport news
கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024)
Airtel Recharge Hike : ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீச்சார்ஜ் விலை உயர்வு
மினி பஸ் திட்டம் 2024 – புதிய வரைவு அறிக்கை வெளியீடு