
Chennai Anganwadi Recruitment 2025: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், மினி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான காலியிடங்கள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டத்தின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு 2025 நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த 23.04.2025 தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேலை தேடும் பெண்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025க்கான விவரங்கள்
சென்னை அங்கன்வாடி வேலை வகை, காலியிடங்கள், முக்கிய தேதிகள் போன்ற விவரங்கள் இங்கே உள்ளது.
நிறுவனம் | சென்னை அங்கன்வாடி மையங்கள் |
வகை | அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 308 |
ஆரம்ப தேதி | 07.04.2025 |
இறுதி தேதி | 23.04.2025 |
காலியிட விவரங்கள்
சென்னை அங்கன்வாடி அங்கன்வாடி ஆட்சேர்ப்புக்கு அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிகளுக்கான காலியிட விவரங்கள் இதோ சுருக்கமாக.
பதவியின் பெயர் | காலியிடம் |
அங்கன்வாடி பணியாளர்கள் | 184 |
குறு அங்கன்வாடி பணியாளர்கள் | 22 |
அங்கன்வாடி உதவியாளர்கள் | 102 |
சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 தகுதிகள்
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
அங்கன்வாடி பணியாளர்கள் | 12ம் வகுப்பு தேர்ச்சி |
குறு அங்கன்வாடி பணியாளர்கள் | 10ம் வகுப்பு தேர்ச்சி |
அங்கன்வாடி உதவியாளர்கள் | தமிழ் எழுத படிக்க வேண்டும் |
சம்பள அளவு
பதவியின் பெயர் | ஊதிய விவரங்கள் |
அங்கன்வாடி பணியாளர்கள் | Rs.7700 முதல் Rs.24200 |
குறு அங்கன்வாடி பணியாளர்கள் | Rs.5700 முதல் Rs.18000 |
அங்கன்வாடி உதவியாளர்கள் | Rs.4100 முதல் Rs.12500 |
வயது வரம்பு
அங்கன்வாடி பணியாளர்கள் | 25 to 35 |
குறு அங்கன்வாடி பணியாளர்கள் | 25 to 35 |
அங்கன்வாடி உதவியாளர்கள் | 25 to 40 |
அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு அத்துடன் விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / SC & ST வகுப்பினர்: 25 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள்: 25 வயது முதல் 38 வயது வரை இருக்க வேண்டும்
அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / SC & ST வகுப்பினர்: 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள்: 20 வயது முதல் 43 வயது வரை இருக்க வேண்டும்
சென்னை அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பிக்கும் முறை:
வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரபூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல் இனைத்து சம்மந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07.04.2025
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 23.04.2025
தேர்வு செய்யும் முறை:
தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே.
சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பக்கட்டணம்:
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இலவசமாக விண்ணப்பிக்கலாம். அனைவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Chennai Anganwadi Recruitment 2025 Official Website
Anganwadi Worker Application Form