அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சையை தொடர்ந்து சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. mahavishnu spirituality speech
சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு :
சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு என்பவர் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவிகள் மத்தியில் தன்னம்பிக்கை பேச்சு வழங்க வந்தவர் பாவ, புண்ணியம் மற்றும் முன்ஜென்ம பலன்கள் பற்றி பேசினார். அத்துடன் மாற்றுத்திறனாளியாகப் பிறக்க முன்ஜென்ம பாவ வினைகளே காரணம் என்றும் கூறினார். Chennai Ashok Nagar School Headmaster Transfer
மேலும் அந்த வீடியோவில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளியின் ஆசிரியருடன் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளியான அந்த தமிழ் ஆசிரியருடன் அவர் வாக்குவாதம் செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. anbil mahesh poyyamozhi press meet
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் :
இந்நிலையில் இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்ததை தொடர்ந்து பள்ளியின் முன்னாள் பல்வேறு மாணவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளியில் பிற்போக்குத்தனமான உரையை அனுமதிப்பதா என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். mahavishnu spirituality lecture controversy
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !
இதனை தொடர்ந்து சென்னையில் அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu Directorate of School Education Notice