சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் - மாநகராட்சி தகவல் !சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் - மாநகராட்சி தகவல் !

தற்போது சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 7 ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5000 ஆயிரமாக சென்னை மாநகராட்சி உயர்த்தியது.

இதனையடுத்து கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.2½ லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. chennai corporation digital fine for littering

தற்போது அபராதத் தொகை விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது.

அரியலூரில் அமையும் Free Trend காலனி தொழிற்சாலை – 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு !

அந்த வகையில் இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. மேலும் இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *