சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் - மாநகராட்சி உத்தரவு !சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் - மாநகராட்சி உத்தரவு !

தெற்கு வங்கக் கடலின் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள், அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது.

இதனையடுத்து சென்னையில் அதிக கன மழை சுமார் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நாளை மறுதினம் சென்னைக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (Red Alert ) விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூன்று மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Chennai Corporation directed to pay extra attention to 180 flood prone areas

இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம் இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு!

அந்த வகையில் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை குறிப்பாக மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் கடந்த காலங்களில் மழை நேரங்களில் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதன் அடிப்படையில் சுமார் 180 இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *