Home » செய்திகள் » அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் – மாநகராட்சி அறிவிப்பு!

அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் – மாநகராட்சி அறிவிப்பு!

அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் - மாநகராட்சி அறிவிப்பு!

தற்போது அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள அனுமதியற்ற இணைய, டிவி கேபிள்கள் மற்றும் ஆங்காங்கே நடப்பட்டுள்ள அதற்கான கம்பங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அத்துடன் அனுமதி பெறாத வழித்தட கேபிள்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி, 1 கி.மீ கேபிள்களுக்கு, ரூ.1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில், அனுமதி இல்லாமல் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட கேபிள்களுக்கான தட வாடகையையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஓரிரு ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பழுதடைந்த அல்லது பயன்படுத்தாத இணைய மற்றும் தொலைகாட்சி கேபிள்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்றாமல் வைத்துள்ளனர் என்று குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பணிகள் நிலைக்குழு தொடர்பான கூட்டத்தில், சென்னை மாநகராட்சி எல்லையில் அனுமதி பெறாமல் உள்ள கேபிள்கள், அவற்றிற்கான கம்பங்கள் உள்ளிட்டவற்றிற்கு 1 லட்சம் ரூபாய்; அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி அமைத்திருந்தால் 75,000 ரூபாய், ஒழுங்கற்ற முறையில் அமைத்திருந்தால், 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top