
சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெலிவரி ஊழியர்: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் தான் அதிகமாக ஆர்டர் செய்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக டெலிவரி செய்ய போகும் ஊழியர்கள் அந்த பெண்களுடன் ரூமுக்கு சென்று வெளியே வருவது போல் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் டெலிவரி ஊழியர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதை கொடுப்பதற்காக எருக்கங்சேரி பகுதியை சேர்ந்த டெலிவரி ஊழியர் ரவிக்குமார் உணவை டெலிவரி செய்த பின்னர் அந்த இளம் பெண் அசந்த நேரத்தில் உள்ளே சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த இளம் பெண் புகார் கொடுத்த நிலையில், ரவிக்குமாரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?… அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க மக்களே!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்
பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை