
தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஃபெஞ்சல் புயல் :
தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் இன்று காலை முதல் சென்னை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் விவரம் :
சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் இன்று கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகின்றன.
(நள்ளிரவு 12 .30 ) சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்
(இரவு 11.55 ) சென்னை – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ்
(இரவு 8 மணி ) சென்னை – திருவனந்தபுரம் ரயில்
(11.30 இரவு ) சென்னை – பெங்களூரு மெயில்
(இரவு 11 மணி ) சென்னை – கோவை அதிவிரைவு ரயில்
(இரவு 10.30 ) கோவை சேரன் எக்ஸ்பிரஸ்
போன்ற ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க 3 நிமிடம் தான் – அதுக்கு மேல பண்ணா அபராதம்!
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?