தற்போது சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஃபோர்டு நிறுவனம் :
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்து, படிப்படியாக உற்பத்தி குறைக்கப்பட்ட அதன் பிறகு 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது .
இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி,
போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. அந்த வகையில் ஃபோர்டு நிறுவனம் தனது கடைசி காரை தயாரித்து, இனி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. Chennai Ford car factory restart
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் :
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12ம் தேதி வரை அதாவது 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அந்த வகையில் அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முதல்வர் மு.க ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீடுகளையும் ஈர்த்தார்.
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – எந்த தேதி வரை தெரியுமா ?
ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு :
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் , அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.