சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ் நடைபெறுவதன் காரணமாகன் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயம் போக்குவரத்து மாற்றம் :
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நாளை (31.08.204) மற்றும் ஞாயிற்றுகிழமை (01.09.2024) சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவுள்ள சாலைகளில் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்ட்டுள்ளன.
தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்,
காமராஜர் சாலை :
காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயிண்ட், ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
மவுண்ட் ரோட்டில் :
வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
மேலும் சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.
வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் :
காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை என்று மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம் என்றும் பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்போது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும், அதற்குப் பதிலாக பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் ரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அமையும் Nokia & Paypal நிறுவனம் – இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பா?
கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் :
இந்நிலையில் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில்,
கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.