தற்போது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் 2024 நாளை தொடங்கப்பட்டு வரும் நவம்பர் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 ஆன்லைன் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி :
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை முதல் தொடங்க உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது.
பரிசுத்தொகை :
மேலும் இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ.70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இப்போட்டிகள் 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ் இருக்கா? அப்ப இத முதல பண்ணுங்க!
டிக்கெட் கட்டணம் :
இதனையடுத்து சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 ஆன்லைன் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய bookmyshow.com. என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஒரு வாரம் பரபரப்பான செஸ் போட்டிகளில் எங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்திய செய்திகள் :
தமிழகத்தில் 316 முதுநிலை மருத்துவர்கள் தலைமறைவு – ஷாக்கிங் தகவல்!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (04.11.2024) ! முழு தகவல் உள்ளே !
திருமாவளவன் – விஜய் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி ? – முழு விவரம்
கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI – ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம்