சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து: சென்னை கிண்டியில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை அவர் மீது கத்திக்குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து – தமிழக முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
இதனை தொடர்ந்து இது குறித்து அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர்கள் தற்போது அதிரடி முடிவை எடுத்துஉள்ளனர்.
அதாவது கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தை கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!
இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கூறி அனைத்து மருத்துவ சங்கங்களும் தெரிவித்தனர்.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்