தற்போது சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம் செய்துள்ளார் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை :
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பாலாஜி என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தினார்.
தற்போது கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Chennai guindy Government Hospital
மருத்துவருக்கு கத்திக்குத்து :
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை 2 பேரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த தனது தாயாருக்கு சரியான சிகிச்சைவில்லை எனக் கூறி பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 – உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!
கைதானவர் வாக்குமூலம் :
இந்நிலையில் கைதான விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்து கத்தி எடுத்து வந்ததாகவும்,
தனது தயார் வலியால் துடித்ததை தாங்கிக்கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் அளித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம் செய்துள்ளார் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.