
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை: தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில முக்கிய பகுதிகளில் நீர் தேங்கி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை வலுப்பெற்று இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – ஃபெங்கல் புயலால் அடுத்த 5 நாட்கள் நடக்க போவது என்ன?
ஐபிஎல் 18ல் அறிமுகமாகும் 13 வயது சிறுவன் – கோடிகளில் வாங்கிய RR அணி – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
அதே போல் டெல்டா மாவட்டங்கள் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே இதன் காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்