இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் சாலை விபத்துகளால் மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் பல சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் அரசாங்கமும் விபத்துகளை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தின் போது மாலைகள் வீசப்படுவது வழக்கம். அப்படி வீசப்பட்ட மாலையில் பைக்கை ஏற்றிய ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் அனைத்து போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இறுதி ஊர்வலத்தின் போது இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காக, இறந்தவரின் உறவினர்கள் எப்போது? எந்த வழியாக ஊர்வலம் மேற்கொள்ள போகிறார்கள் என்பதை முன்கூட்டியே போலீசிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப போக்குவரத்துகளை சரி செய்வதோடு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாலைகளை சாலையில் தூக்கி எறிய கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CSK Vs GT 2024.., ஆட்டத்தை டோட்டலா சேஞ்ச் செய்த தல தோனி.., சேப்பாக்கத்தில் 2-வது முறையாக அபார வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *