போலி ஹால்மார்க்
தற்போதைய காலகட்டத்தில் மக்களை நூதன முறையில் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுது சென்னையில் உள்ள கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் ஒரு நகை கடையில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தர நிர்ணயத்தின் (பி.எஸ்.ஐ.) சென்னை கிளை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த 1.173 கிலோ எடையுள்ள 262 நகைகள் சிக்கியது. குறிப்பாக இதில் 25 செயின்கள், 16 வளையல்கள், 217 மோதிரங்கள், 4 ஜோடி கம்மல் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த குற்றத்திற்காக கடை உரிமையாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கலாம். மேலும் இது மாதிரி போலி ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் விற்கப்பட்டால் ரமணியில் உள்ள பி.ஐ.எஸ். சென்னை கிளை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். hcnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவலை பதிவு செய்யலாம். மேலும் தங்க நகைகளை HUID எண்ணை BIS care என்ற செல்போன் செயலியில் பதிவிட்டு நகையின் தரத்தை சரி பார்க்கலாம். அதுமட்டுமின்றி www.bis.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உண்மையான ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.