
சென்னை-மதுரை டிக்கெட் விலை அதிகரிப்பு: தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பல்வேறு கட்சியினர் பரபரப்பாக இருந்து வருகின்றனர். இம்முறை எந்த கட்சி வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது . மேலும் வெளியூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் வருவதற்கு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என பல்வேறு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருக்கிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பயணம் கட்டணத்தை எக்குத்தப்பாக உயர்த்தியுள்ளது. அதன்படி
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

- சென்னை to கோவை செல்வதற்கான பயண கட்டணம் முதலில் ரூ.3,342ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.8,616ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- அதே போல் சென்னை to சேலம் செல்ல ரூ.2,433 ஆக விமான டிக்கெட் கட்டணம் இருந்த நிலையில் இப்பொழுது ரூ.5,572ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- சென்னை to மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,674லிருந்து அதிகபட்சமாக ரூ.11,531க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சென்னை to தூத்துக்குடி,பயண கட்டணம் ரூ.3,957லிருந்து ரூ.12,716ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் – கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர்!!
இதனால் விமான பயணிகள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.